கோர விபத்தில் உயிரிழந்த யுவதி தொடர்பில் வெளியான தகவல்!!

560

கேகாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த யுவதி மரணம் தொடர்பில் மரண விசாரணை அறிக்கையை, அது தொடர்பான அதிகாரியான ரேணுகா சுபோதனி களுஆராச்சி நிஷங்க வெளியிட்டுள்ளார்.

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை கேகாலை பொது வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி கே.ஆர்.சுரங்க குலதுங்கவினால் மேற்கொள்ளப்பட்டது.

வழங்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையின் பிரகாரம், பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தலை, மார்பு உட்பட பல காயங்களினால் ஏற்பட்ட தற்செயலான மரணம் என கேகாலை பிரதேச செயலகத்தின் மரண விசாரணை அதிகாரி ரேணுகா சுபோதனி களுஆராச்சி நிஷங்க தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்று ரம்புக்கனையில் நடைபெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலாம் இணைப்பு :  கேகாலை மங்களகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் கேகாலை மங்களகம பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியொன்று எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் மூவர் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த யுவதி படுகாயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற விபத்தின் பின்னர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த யுவதி ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதி என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், ரம்புக்கனம், உடகல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த, விபத்தில் உயிரிழந்த யுவதியின் நாயும் உயிரிழந்துள்ளது. அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவி என்றும், இன்னும் சில நாட்களில் தனது பட்டப்படிப்பை முடிக்க தயாராகியிருந்தார் என கூறப்படுகிறது.