கொழும்பில் இருந்து தனது குடும்பத்தினருடன் யாழ்ப்பாணத்துக்கு வந்து மோசடி செயலில் ஈடுபட காத்திருந்தவை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது குடும்பத்துடன் அரியாலை பகுதியில், நாள் வாடகைக்கு வீடொன்றை பெற்று தங்கியுள்ளார்.
இந்நிலையில் சனிக்கிழமை (09) அன்று குறித்த நபர் திருநெல்வேலி சந்தைக்கு அண்மித்த பகுதியில், போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரம் மற்றும் அதற்கு பயன்படும் தாள்களை நபர் ஒருவருக்கு விற்பனை செய்யும் நோக்கில் சந்தேகநபர் காத்திருந்துள்ளார் .
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நபரை கைது செய்து அவரிடம் இருந்த பொருட்களை மீட்டுள்ளனர் .
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது , அவர் குடும்பத்துடன் அரியாலையில் தங்கியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து , குறித்த வீட்டுக்கு பொலிஸ் குழு சென்றபோது வீட்டில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்ததாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .