கூகுள் பிளஸ் தரும் புதிய மாற்றம்!!

322

Google Plus

பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் கணக்கினை உருவாக்குவதற்கு பொதுவாக விரும்பிய பெயர்களை பயன்படுத்த முடியும். ஆனால் கூகுள் பிளஸில் உண்மையான பெயரையே பயன்படுத்தக்கூடியதாக காணப்பட்டது.

எனினும் தற்போது இந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு கூகுள் பிளஸ் கணக்கினை உருவாக்குவதற்கு விரும்பிய பெயரை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கூகுள் பிளஸ் வலைத்தளப் பாவனையில் எதிர்வரும் காலங்களில் முன்னேற்றம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.