கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

668

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்கு சென்று கொண்டிருந்த பெண்ணொருவர் விபத்துக்குள்ளாகி உள்ளார். வெளிநாடு செல்லும் கணவனை விமான நிலையத்திற்கு விட்டு வீடு திரும்பிய வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

கிரிபத்கொட ஹுனுபிட்டிய வீதியில் உள்ள பாதசாரி கடவையில் நேற்று இரவு 11.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் பாரவூர்தியுடன் அதிநவீன கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காரின் காற்று பலூன்கள் இயக்கப்பட்டதால் ஓட்டி வந்த பெண் காப்பாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரின் பின்பக்கத்தில் இருந்த ஒருவர் சிறு காயங்களுடன் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கண்டெய்னரின் வலது புறத்தில் இருந்த எரிபொருள் தொட்டி மீது கார் மோதியது.

கார் பலத்த சேதமடைந்துள்ளதுடன், கார் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாகொலவில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான கொள்கலன் பாரவூர்தியின் சாரதி தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.