யாழ்ப்பாணம் – அராலி வடக்கு பகுதியில் இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவி்த்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (10.06.2024) இடம்பெற்றுள்ளது. அராலி வடக்கு பகுதியை சேர்ந்த 24 வயதுடைய சிவகரன் மயூரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் தந்தையும், சகோதரனும் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில் அவர் இன்று உயிர்மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.