வவுனியாவில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் இன்று வியாழக்கிழமை சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பணிப்பில்- வவுனியா கலை ஆர்வலர்களின் பங்களிப்பில் வவுனியா பிரதேச செயலகம் நடத்திய இந் நிகழ்வில் இன்று காலை வவுனியா நகரில் அமைந்துள்ள நவாலியூர் சோமசுந்தர புலவரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திரவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந் நிகழ்வில் ஆடிக்கூழ் காய்ச்சப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வவுனியா உதவி பிரதேச செயலாளர் சாரதாஞ்சலி கர்ணன் தலைமையில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.








