“ஜனாதிபதி கடவுளே எனக்கு உதவு” : இணையத்தில் வைரலாகும் நபரின் புகைப்படம்!!

405

கடுகன்னாவ பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவர் “ஜனாதிபதி கடவுளே எனக்கு உதவு” என்ற பதாதையை ஏந்தியவாறு நடந்து செல்லும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து கோட்டை ஜனாதிபதி மாளிகை வரை நடந்து செல்லும் பேரணியை குறித்த நபர் ஆரம்பித்துள்ளார். குறித்த நபர் வங்கியொன்றில் 15 இலட்சம் ரூபாவை கடனாக பெற்றுள்ளார்.

இந்நிலையில், அதனைத் தீர்க்க முடியாத காரணத்தினால், ஜனாதிபதியிடம் இருந்து நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்த்து இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அந்த உதவியை பெற்றுக் கொள்வதற்காக அவர் நடை பேரணி ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.