யாழில் வீதியில் சென்ற இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக மரணம்!!

561

யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் டிப்பர் வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இன்று புதன்கிழமை (12) அதிகாலை யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், நுணாவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமொன்று அவரை மோதியுள்ளது.

இதன்போது இவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். குருணாகல் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.



உயிரிழந்தவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்