இலங்கை பந்து வீச்சாளர் சசித்ர சேனாநாயக்க பரிசோதனையின் போது அழுத்தங்களுக்கு உட்பட்டார் : பயிற்றுவிப்பாளர்!!

501

C

இலங்கையின் சுழல்பந்து வீச்சாளர் சசித்ர சேனாநாயக்கவின் பந்துவீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்து லோட்ஸ் மைதானத்தில் வைத்து கடந்த மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக பந்துவீசும் போது சசித்ரவின் பந்துவீச்சில் பிழை இருப்பதாக நடுவர்களால் முறையிடப்பட்டது.

இதனையடுத்து அவரின் பந்துவீச்சை பரிசோதனைக்கு உட்படுத்துவது என்று சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தீர்மானித்தது.

இதன்படி பந்து வீச்சு பரிசோதனையின் போது சாதாரணமாக சுழல் பந்துவீச்சாளர் ஒருவர் 15 பாகை அளவில் கையை உயர்த்தி பந்து வீச வேண்டும் என்ற விதியை மீறி சசித்ர 43 பாகை உயர்த்தி பந்தை வீசியமை வெளிப்பட்டது.

அத்துடன் பரிசோதனையின் போது அவர் லோட்ஸ் மைதானத்தில் பந்து வீசியதை போன்றல்லாமல் கையை அளவாக உயர்த்தியே பந்துவீசினார்.

எனினும் அதுவும் 15 பாகைக்கும் அதிகமாகவே இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டு அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசுவதில் இருந்து இடைநிறுத்தப்பட்டார்.

இந்தநிலையிலேயே தற்போது பரிசோதனையின் போது அவருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக அவரின் பயிற்றுவிப்பாளர் பியால் விஜயதுங்க தெரிவித்துள்ளார்.