கடலில் தவறி விழுந்து மற்றுமொரு வைத்தியர் உயிரிழப்பு!!

1144

அம்பாறை – காரைதீவைச் சேர்ந்த வைத்திய கலாநிதி ஒருவர் பாணமை கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். காரைதீவைச் சொந்த இடமாகக் கொண்ட வைத்திய கலாநிதி இ.தக்சிதன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் உயிரிழந்தவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரதே பரிசோதனைக்காக பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.



மேலும், காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இருந்து இம்முறை மருத்துவத்துறைக்குத் தெரிவான காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (வயது 20) என்ற மாணவன் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை, லகுகல கடலில் தவறி விழுந்து உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.