தென்னிலங்கையில் வெளிநாட்டவரால் ஏற்பட்ட விபரீதம் : தந்தை பலி, மகன் படுகாயம்!!

485

களுத்துறை நகரில் பாதசாரி கடவையில் வீதியை கடந்த தந்தை மகன் மீது சீனப் பிரஜைகள் பயணித்த சொகுசு கார் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை நாகொட சந்தர்ஷனாராம வீதியை சேர்ந்த 46 வயதுடைய சதுன் அரவிந்த என பொலிஸார் தெரிவித்தனர்.



காரை ஓட்டி வந்த சீன நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.