தைவானில் பட்டம் விடும் திருவிழா ஒன்று கோலாகலமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த திருவிழாவின்போது, அங்கிருந்த அனைவரும் ராட்சத பட்டம் ஒன்றை, பறக்க வைக்க முயற்சி செய்துள்ளனர்.
குறித்த ராட்சத பட்டம் வானில் பறக்கும்போது, அதன் வாலை பிடித்துக் கொண்டிருந்த 3 வயது சிறுமியும், மேலே பறந்துள்ளார். இதைக்கண்டு அங்கிருந்த பலரும், கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், காற்றின் வேகம் சீரான பிறகு, அந்த சிறுமி மீண்டும் கீழே வந்தார்.
இதையடுத்து, அந்த சிறுமியை, அங்கிருந்த வைத்தியர்கள் பரிசோதனை செய்தனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த சிறுமிக்கு சிறுகாயங்கள் மட்டுமே ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து, விழா ஏற்பாட்டாளர்கள், அந்த பட்டம் விடும் திருவிழாவை உடனடியாக நிறுத்தியுள்ளனர்.
இச் சம்பவம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்தபோதிலும், தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.
3-year-old girl gets caught in kite and flies into the sky pic.twitter.com/Zx73BtlC6e
— Insane Reality Leaks (@InsaneRealitys) June 17, 2024