இந்தியாவில் 300 அடி பள்ளத்தில் விழுந்த கார்.. றீல்ஸ் மோகத்தால் வந்த வினை!!

445

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் 300 அடி பள்ளத்தில் கார் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவமானது நேற்று (18.06.2024) மதியம் இடம்பெற்றுள்ளது. விபத்தில், மகாராஷ்டிரா மாநிலம் சுளிபஞ்சன் பகுதியை சேர்ந்த 23 வயதான ஸ்வேதா சர்வசே என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் அவரது நண்பனிடம் தான் கார் ஓட்டுவதை வீடியோ எடுக்குமாறு கூறி, ரிவர்ஸ் எடுக்க முயன்ற போது திடீரென பிரேக் அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதால் கார் மிக வேகமாக பின்னோக்கி சென்று தடுப்புகளை உடைத்து 300 அடி பள்ளத்தில் விழுந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது.