வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சத்தியாக்கிரகம்!!

485

வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள்
பம்பைமடுவில் உள்ள பல்கலைக்கழக வளாகம் முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தமது சம்பள முரண்பாட்டை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியாக பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்றைய (20.06.2024) தினத்திலிருந்து சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.



இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களும் பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக கொட்டகை அமைத்து சத்தியாக்கிரக போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

தங்களது பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்படவேண்டும். அவ்வாறு தீர்க்கப்படாத பட்சத்தில் குறித்த போராட்டம் தொடர்ந்து செல்லும் என்று தெரிவித்த போராட்டகாறர்கள், ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்த்து வை, கொடுப்பனவை அதிகரி, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.