கள்ளச்சாராயம் அருந்தி 38 பேர் உயிரிழப்பு : கிராமம் முழுவதும் மரண ஓலம்!!

689

தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி 38 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கிராம் எங்கும் மரண ஓலம் ஒலிப்பதாக கள்ளக்குறிச்சி- கருணாபுர கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் – காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்
கள்ளக்குறிச்சி – கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் அருந்தியதாக 109 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று காலை வரை 36 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் சம்பவத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டு, காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்,

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க மாவட்டம் முழுவதும் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கருணாபுரம் பகுதியில் கூடுதலாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு உயிரிழந்தோரை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் கள்ளச் சாராயம் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது.