யாழில் சிறுமி துஷ்பிரயோகம் : 7 கடற்படை வீரர்கள் விளக்கமறியலில்!!

576

A9

யாழில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 7 கடற்படை வீரர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் பாடசாலைக்குச் சென்ற போது, அவரைத் தடுத்து வைத்து தொடர்ச்சியாக பதினொரு நாட்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.