
உலகத்தர வரிசைப் பட்டியலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஜேர்மனி முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்த ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக்கிண்ண போட்டியில் ஜெர்மனி சம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாறு வெற்றியானது ஜேர்மனிக்கு முதலிடத்தை பெற்றுத் தந்துள்ளது.
அதே போல் மெஸ்ஸியின் தலைமையில் இறுதிப்போட்டி வரை வந்த அர்ஜென்டினா அணி மூன்று இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் பிரேசிலை வீழ்த்திய நெதர்லாந்து 12 இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. பிரேசில் நான்கு இடங்கள் பின்தங்கி 7வது இடத்துக்கு சென்றுள்ளது.
நடப்பு சம்பியனான ஸ்பெயின் லீக் ஆட்டத்திலே வெளியேறியதால் ஏழு இடங்கள் சரிந்து எட்டாவது இடத்தில் உள்ளது. சுவிஸ்லாந்து மற்றும் பிரான்ஸ் முறையே ஒன்பது, பத்தாவது இடங்களையும் பிடித்தன. காலிறுதிக்குத் தெரிவான கோஸ்டாரிகாவின் வெற்றி அந்நாட்டை 12 இடங்கள் முன்னேற்றி 16வது இடத்தில் வைத்தது.
முதல் சுற்றிலேயே வெளியேறிய இங்கிலாந்து அணி 10வது இடத்தில் இருந்து 20வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.





