வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் வழியிலேயே பறந்த மோடியின் விமானம் : பரபரப்புத் தகவல்!!

591

மலேசிய விமானம் எம்.எச்.17, ஏவுகணையால் வீழ்த்தப்படாமல் இருந்திருந்தால் அந்த பகுதி வழியாகவே பிரதமர் மோடி விமானமும் சென்றிருக்கும் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுளது.

உக்ரைன் – ரஷ்யா எல்லையில் இருந்து 40 கி.மீ தொலைவில் டோரெஸ் எனும் இடத்தில் எம்.எச்.17 விமானம் ஏவுகணை கிளர்ச்சியாளர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஏர் இந்தியா-001 விமானம் பிராங்போட் நகரில் இருந்து புறப்பட்டுள்ளது. இதுபற்றி தெரிவித்துள்ள விமான அதிகாரி ஒருவர், சுட்டு வீழ்த்தப்பட்ட எம்.எச்-17 சென்ற அதே வான்வழியிலேயே மோடி விமானமும் சென்றிருக்கும்.

ஆனால், விமானி சாதுர்யமாக யோசித்து பயணத்தடத்தை மாற்றியிருக்கிறார் என்றார். மேலும், 298 பேருடன் சென்ற மலேசிய பயணிகள் விமானம் உக்ரைனில் வியாழக்கிழமை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதில், விமானத்தில் இருந்த 283 பயணிகளும், 15 ஊழியர்களும் உயிரிழந்துள்ளனர்.

M1 M2