யாழ்ப்பாணம்(Jaffna) – உடுவில் தெற்கு பிள்ளையார் கோயில் அருகே உள்ள காணியொன்றிலிருந்து மோட்டார் சைக்கிளொன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று(26.06.2024) இரவு இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் இனங்காணப்படாததையடுத்து, காணி உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுன்னாகம் பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.