மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை வீதித் தடுப்பில் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-06 வீதியில் குருநாகலையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற போது மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது ஒருவர் படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் லக்கல மற்றும் மாத்தளை பிரதேசத்தில் வசித்து வந்த 29 மற்றும் 40 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, குருநாகல்-புத்தளம் வீதியின் கெலிமுனை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அந்த விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.