கம்பஹா பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றிய பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பெண்ணின் சடலம் பியகம பொலிஸாரால் இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் மாடியில் உள்ள அறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணுடன் வீட்டில் ஒன்றில் ஒன்றாக தங்கியிருந்த நபரிரனால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. வலயத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய 29 வயதான ஷம்மி மதுஷிகா என்பரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், நேற்றைய தினம் பிற்பகல் கொஸ்கொட கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 29ஆம் திகதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அந்த நபர் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கொஸ்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போது, அவர் இந்த சம்பவத்தை வெளிப்படுத்தியதுடன், கொஸ்கொட பொலிஸார் இது தொடர்பில் பியகம பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் குறித்த நேரத்தில், அவர் சில இரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் பொலிஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சந்தேகநபர் நிரந்தர தொழில் இல்லாதவர் எனவும் 32 வயதான எல்பிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் பியகம பொலிஸார் மஹர நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், அதற்கமைய, மஹர நீதவான் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வந்து நீதவானின் அவதானிப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.