62 வயது மூதாட்டியை மணமுடித்த 9 வயதுச் சிறுவன்!!

371

தென்னாபிரிக்காவில் 62 வயது மூதாட்டியை 9 வயது சிறுவன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தென்னாபிரிக்காவின் மும்மலங்கா என்ற கிராமத்தை சேர்ந்த மசிலேலா(9) என்ற சிறுவன், ஹெலின்(62) என்ற மூதாட்டியை திருமணம் செய்து கொண்டுள்ளான். ஹெலினிற்கு முன்பே திருமணமாகி 28 முதல் 38 வயது நிரம்பிய, 5 குழந்தைகள் உள்ளனர்.

மேலும் இவரது இந்த இரண்டாவது திருமணத்திற்கு, பல விருந்தினர்கள் மட்டுமல்லாமல் இவரின் குழந்தைகள் மற்றும் முதல் கணவரும் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களது திருமணம் முடிந்ததும், அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்து அல்ஃபெர்ட் கூறுகையில், எங்களுக்கு இந்த திருமணத்தால் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும், மக்கள் விமர்சனத்தை பற்றி நாங்கள் பொருட்படுத்த போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திருமணம் முன்னோர்களுக்காக செய்யப்பட்டதாகவும், மசிலேலா எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்வார் எனவும் அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.

B1 B2 B3 B4 B5