பதுளையில் கோர விபத்து : சம்பவ இடத்திலேயே பலியான நால்வர்!!

132

பதுளை – சொரனாதோட்டை வீதியில் லொறியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (05.07.2024) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதோடு அவர்கள் சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதிகளில் பயணிகள் தங்குமிடங்களை அமைப்பதற்காக மொனராகலையில் இருந்து வந்தவர்களே இந்த கோர விபத்தில் சிக்கியுள்ளனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.