விசேட அதிரடி படையினரால் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்ட யுவதி!!

829

மொரட்டுவ பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த யுவதி ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

மொரட்டுவ படை முகாமின் மோட்டார் சைக்கிள் அணி அதிகாரிகள் குழு மற்றும் பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழுவின் அதிகாரிகள் குழு இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவை லுனாவ பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த யுவதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யுவதி கைது

அந்த வீட்டில் இருந்து 80 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 500 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட யுவதி மேலதிக விசாரணைகளுக்காக மொரட்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.