மாணவியொருவர் கொண்டு சென்ற ஆமணக்கு விதைகளை உட்கொண்டு சுகவீனமுற்ற 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (5) வெள்ளிக்கிழமை பிற்பகல் பொலன்னறுவை பிரதேசத்தில் திம்புலாகல கல்வி வலயத்துக்குட்பட்ட வெலிகந்த, அசேலபுர பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
சுகவீனமடைந்த மாணவர்கள் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் 4 மாணவர்களும் 3 மாணவிகளுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சுகவீனமடைந்த மாணவர்களின் உடல் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.