பெற்ற மகளை எரித்து கொலை செய்த பெற்றோர்!!

266

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் ரவி பீல் என்பவரை பெற்றோர் விருப்பத்திற்கு மாறாக திரமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் அப்பெண்ணை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதை அறிந்த காதல் தம்பதி பல்வேறு இடங்களில் தங்கி தங்களது உயிரை பாதுகாத்து வந்தனர். இறுதியாக காதல் தம்பதியினர் வங்கிக்கு வரவுள்ள தகவல் அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது. இதனால் வங்கிக்கு சென்ற குடும்பத்தினர் அங்கே காத்திருந்து, அப்பெண்ணை கணவரின் கண் முன்னே காரில் கடத்தி சென்றன.

இதையடுத்து கணவர் போலீசில் புகார் அளித்தார். அதற்குள்ளாக அந்த இளம்பெண்ணை கடத்தி சென்ற குடும்பத்தினர், அவரை கொலை செய்து உடலை எரித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பெண்ணின் உடல் 80 சதவீதத்துக்கும் மேல் எரிந்திருந்தது. போலீசார் வருவதை அறிந்த குடும்பத்தினர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர்.

எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குபதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.