பொலிஸாரின் தவறால் வாழ்க்கையை தொலைத்த மாணவர் : கண்ணீர்விடும் பெற்றோர்!!

596

பொலிஸாரின் தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தலையில் பலத்த காயம் அடைந்த மாணவன் ஒருவர் முற்றாக ஊனமுற்றுள்ளார்.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மாத்தறை நாவிமன பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இதனால் மாணவனின் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை மீட்க உதவி கோரியுள்ளனர்.

பிறவியிலேயே ஊனம் இல்லாத ஹரிஷ் ஹன்சகவுக்கு பொலிஸாரின் தவறுதலான துப்பாக்கிச்சூட்டால் , இன்று பேசக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, ஒரு பொலிஸ் அதிகாரியின் தவறு காரணமாக ஹன்சகவின் தலையில் சுடப்பட்டு, அவர் ஊனமுற்றார்.

இவர் தனது நண்பர்களுடன் கிராம விகாரை ஊர்வலத்தில் காவடி ஆடுவதற்காக மயில் தோகை தேட சென்ற போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் கடின பிரயத்தனத்தால் ஹன்சக இன்று இவ்வாறு வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் 5 பேர் கொண்ட மிகவும் வறிய குடும்பத்தில் நோய்வாய்ப்பட்ட குழந்தையை குணப்படுத்துவது பெற்றோருக்கு மிகவும் சவாலாக உள்ளது.

அதற்குக் பிரதான காரணம் தந்தையின் கூலி வேலையில் இருந்து வரும் வருமானமே. இதுவரை செய்த சிகிச்சையால், தற்போது எழுந்து உட்காரும் நிலைக்கு வந்துள்ளார்.

உள்ளூர் வைத்தியர் ஒருவர் அவருக்கு சிகிச்சை அளிக்க விருப்பம் தெரிவித்தாலும், அதற்கு ஹன்சகவை அழைத்துச் செல்ல பெற்றோரால் முடியாத சூழ்நிலையே காணப்படுகிறதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.