
இங்கிலாந்து போட்டித் தொடரில் சொதப்பி வரும் விராட் கோஹ்லியை காதலி அனுஷ்கா சர்மா நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.
இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடாத கோஹ்லி 2வது டெஸ்ட் போட்டியிலும் சொதப்பி வருகிறார்.
இந்த போட்டி தொடருக்கு முன்னதாகவே யாரும் எனக்கு ஏதும் சொல்லி தர தேவையில்லை. எப்படி விளையாட வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று கோஹ்லி கூறியிருந்தார்.
இந்நிலையில் சிறப்பாக விளையாடாத அவருக்கு நெருக்கடி அதிகரிக்க காதலியான அனுஷ்கா சர்மா ஆறுதலாக இருப்பதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து தொடர் தொடங்கியதில் இருந்தே அனுஷ்கா கோஹ்லியுடன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் லோர்ட்ஸ் மைதானத்தில் தற்போது நடந்து வரும் டெஸ்ட் போட்டியின் போதும் அனுஷ்கா ஆட்டமிழந்து வந்த கோஹ்லியை பெவிலியனுக்கே வந்து உற்சாகமூட்டி வரவேற்றார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.





