பூமியின் சுழற்சியில் மாற்றம் : விஞ்ஞானிகளின் அதிர்ச்சித் தகவல்!!

559

பூமியின் மையமானது எதிர்புறமாக சுற்றத்தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கடந்த ஜூன் 12 ஆம் திகதி வெளியான ஆய்வு இதழின் கட்டுரை ஒன்றிலேயே இது உறுதி செய்யப்பட்டுள்ளது

Crust, mantle, வெளிப்புற மையம் மற்றும் உள்புற மையம் ஆகிய 4 அடுக்குகளாக பூமி அமைத்துள்ளது.

உலகம் அதன் சுழற்றிச் பாதையில் சுற்றும் வேலையில் பூமியின் மையத்தில் உள்ள திடமான மெட்டல் மற்றும் நிக்கல் உலோகங்களால் ஆன INNER CORE என அழைக்கப்படும் பந்து போன்ற அமைப்பு தனிச்சையாக சுற்றி வருகிறது.

நிலவில் அளவில் 70 சதவீதம் உள்ள இந்த உட்புற மைய உலோக பந்தின் சுழற்சி குறித்து கடந்த நூற்றாண்டு முதலே விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பூமியின் மைய உலோக கோளத்தின் சுழற்சியில் சமீப காலங்களாக மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுழற்சி மட்டுமின்றி இந்த மையப் பகுதியின் சுழற்சி வேகத்திலும் மாறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கு முன்னர் வெவ்வேறு கால கட்டங்களிலிலும் தற்போதும் பூமியில் உள்ள கடல் அலைகள் வீசுகின்ற தன்மைகளையும், பூமியில் ஏற்பட்ட பெரிய அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களின் தரவுகளையும் கணக்கிட்டு பூமி அடுக்கில் உள்ள மையப்பகுதி எதிர்புறமாக சுழலழத் தொடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.