பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த தன்வந்தை பாராட்டிய ஜனாதிபதி!!

170

பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த 13 வயதான திருகோணமலையை சேர்ந்த ஹரிகரன் தன்வந்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் சந்தித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மார்ச் மாதம் 1ம் திகதி பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த மாணவனை ஜனாதிபதி இவ்வாறு பாராட்டியதுடன், கடலில் நீந்திய அனுபவங்களையும் கேட்டறிந்து கொண்டதாக அவரது தந்தை தெரிவித்தார்.

இச் சந்திப்பில் தன்வந்தின் தாய் தந்தையரும் கலந்து கொண்டனர்.