பேஸ்புக்கில் புதிய சாதனை படைத்த ஷகிரா : பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் வாழ்த்து!!

256

Shakira

கொலம்பியாவின் பிரபல பொப் பாடகியான ஷகிரா பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவிற்கு 100 மில்லியன் விருப்பங்கள்(Likes) தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பேஸ்புக் வரலாற்றில் சாதனையாக கருதப்படுகிறது.

சர்வதேச அளவில் ஒருவரின் பதிவிற்கு, இவ்வளவு விருப்பங்கள் கிடைக்கப் பெற்றிருப்பது இதுவே முதல்முறை என்று பீபிள்ஸ் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சாதனை தொடர்பில் ஷகிரா கருத்து வெளியிடுகையில்,

இதனை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் இதனால் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த சாதனை பிறரால் முறியடிப்பதற்கு கடினமான சாதனை என்று கூறினார்.

நிகழ்ச்சி மேடைக்கும், பார்வையாளர்களுக்கும் இடையே இணைப்புப்பாலமாக பேஸ்புக் விளங்குவதாக ஷகிரா கூறியுள்ளார்.
இதேவேளை, ஷகிராவின் புதிய சாதனைக்காக, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.