பிறந்த நாளன்று கல்லூரி மாணவி உயிரிழந்த சோகம்… கதறும் பெற்றோர்!!

229

பிறந்தநாளன்று, தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக கல்லூரி விடுதியில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கர்நாடகா மாநிலம், சிக்கபள்ளாபூர் மாவட்டம் ஹொன்னஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரக்சிதா. இவர் பெங்களூரு நிட்டே மீனாட்சி கல்லூரியில், கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்தபடியே பி.காம் படித்து வந்தார்.

இன்று ரக்சிதாவின் பிறந்த நாள் என்பதால், தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக தனது வீட்டிற்கு வாடகைக் காரில் சென்றுக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை பெங்களூருவில் இருந்து சென்றுக் கொண்டிருந்த நிலையில், இவர்களது கார் விபத்திற்குள்ளானது.



இதில் ஓட்டுநரின் இடப்பக்கம் அமர்ந்திருந்த ரக்சிதா படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவி ரக்சிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து நந்தி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த மாணவி உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய கார் ஓட்டுநர் நிஸ்வந்தை தேடி வருகின்றனர். பிறந்த நாளைக் கொண்டாட வந்த கல்லூரி மாணவி, விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.