கனடாவில் நடிகர் ஒருவர் தனது முகம் , மண்டை மற்றும் உடம்பு முழுவதும் பச்சை குத்திக் கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கனடாவை சேர்ந்த வின் லாஸ் (24) என்ற நடிகர் தனது முகம், மண்டை மற்றும் உடம்பு முழுவதும் வார்த்தைகளை பச்சை குத்திக்கொண்டுள்ளார். தனது 16 வயதில் ஏற்பட்டுள்ள இந்த ஆர்வம், தற்போது இவரை முகத்தில் மட்டும் 24 பச்சைகளை குத்த தூண்டியுள்ளது.
பேனாவை வைத்து எழுதியுள்ளது போல தோற்றமளிக்கும் இந்த பச்சைகள் தனது புகழை பறப்ப உதவும் என அவர் நம்பிவருகிறார்.
இதுகுறித்து வின் கூறுகையில், தான் மக்களின் நடுவில் வித்தியாசமாக தெரிவதாகவும், அனைவரும் தன்னை கேள்வி கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.






