
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கெய்ல் பெண் நிருபரிடம் கிண்டலாக பேசி புதிய சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கெய்ல் அரங்கத்தில் அதிரடியில் கலக்க தவறுவது இல்லை. அதே சமயம் பல பல சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதும் வழக்கம்.
இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் போலவே அங்கு கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதில் தல்லாவா என்ற அணியின் அணித்தலைவராக இருக்கிறார் கெய்ல்.
இந்த போட்டி முடிந்த பிறகு கெய்ல் பேட்டியளிக்கையில், ஒரு பெண் நிருபர், பிட்ச் எப்படி உள்ளது என கருதுகிறீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்ப, அதற்கு சிரித்தவாறே பதிலளித்த கெயில், நான் இன்னும் உன்னை தொடவே இல்லை. பிறகு பிட்ச் எப்படி இருந்தது என்று சொல்ல முடியும் என்று கேட்டதாக சொல்லப்படுகிறது.
அதே போல் அந்த பெண் நிருபரிடம், உங்க சிரிப்பு அழகாக இருக்கிறது. அது எனக்கு பிடித்திருக்கிறது என்றும் கெயில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கெய்லின் இந்த பேச்சு பெண்கள் அமைப்பினரிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற பெண்களுக்கு எதிராக வரம்பு மீறிய தன்னுடைய கருத்துக்காக கிறிஸ் கெயில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து கரீபியன் பிரிமியர் லீக் நிர்வாகிகள் கூறுகையில், போட்டிகள் தொடர்பான நெருக்கடியில் இருந்த கிறிஸ் கெய்ல், பேட்டியின் போது செய்தியாளர்களிடம் உற்சாகமாக பேசி சிரித்துக்கொண்டிருந்தார்.
நகைச்சுவைக்காக அவர் சாதாரணமாக கூறிய வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மற்றபடி அவரது பேச்சுக்கு எந்தவிதமான தவறான உள்நோக்கமும் கிடையாது என்று கூறியுள்ளனர்.





