பிறந்தநாள் விழாவில் களேபரம் : நால்வருக்கு நேர்ந்த கதி : இருவர் கவலைக்கிடம்!!

1029

வீடொன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் விழாவின் போது ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மோதல் சம்பவம் தனமல்வில குமாரகம பிரதேசத்தில் உள்ள இடம்பெற்றுள்ளது.

பிறந்தநாள் விழா இடம்பெற்றுக்கொண்டிருந்த வீட்டின் வாயிலை கெப் வண்டியினால் ஒருவர் மோதி சேதப்படுத்தி சென்றதால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலின் காயமடைந்த நான்கு பேர் ஹம்பாந்தோட்டை மற்றும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதேவேளை கெப் வண்டியில் மோதி வாயிலை சேதப்படுத்திய சாரதி கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் உள்ளவர்களுடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக கெப் வண்டியின் சாரதி இந்த செயலை செய்தமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.