திடீரென விபரீத முடிவெடுத்த 22 வயது இளைஞன்!!

606

அங்குலான பகுதியில் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இளைஞன் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், குறித்த இளைஞனின் பெற்றோர் பொலிஸார் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.


இச்சம்பவத்தில் 22 வயதான சுபுன் ரந்திக எனும் இளைஞனே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அங்குலான பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் (14.07.2024) இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது இளைஞன் ஒருவன் தகறாறு செய்தமை தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.


பின்னர் அங்குலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு சென்று இளைஞனை அழைத்துச் சென்றபோது, ​​குறித்த இளைஞன் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பொலிஸாரிடம் இருந்து தப்பியோடிய இளைஞனை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்து இரவு உணவு கொடுத்த பின் உறங்கச் செய்துள்ளனர்.

இதையடுத்து, நேற்று காலை 7.00 மணியளவில் இளைஞர் ரயில் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தமக்கு அறிவித்ததாக உயிரிழந்த இளைஞனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் பொலிஸார் மீது குற்றம் சுமத்தியுள்ளதுடன் இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.