மொரட்டுவையில் உள்ள வீடொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் “பொடி அய்யா” என அழைக்கப்படும் ஹரேந்து குமார என்ற 41 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் குறிப்பிட்டனர்.
கொலைச் சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.