இளம் பட்டதாரி மாணவி திடீரென உயிரிழப்பு : பிரேத பரிசோதனையில் வெளியான காரணம்!!

782

கிராம உத்தியோகத்தர் பரீட்சையில் சித்தியடைந்து நியமனம் பெறுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த பட்டதாரி யுவதி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஹுன்னஸ்கிரி ரம்புக்பொத்த பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பிலிப் நக்மா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தெல்தெனிய வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி பி.கே. அபேரத்னவினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மூளையில் கட்டி வெடித்து இரத்த கசிவு ஏற்பட்டமையே இந்த மரணத்திற்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது.



இந்நிலையில், உயிரிழந்த யுவதியின் தந்தை மகள் குறித்து தெரிவிக்கையில், “எனது மகள் ஹுன்னஸ்கிரிய சிவனேஸ்வரா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை படித்தார்.

அதன் பின்னர் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து பட்டப்படிப்பை முடித்து கிராம அதிகாரி பரீட்சையில் தோற்றி கிராம அதிகாரி பரீட்சையில் சித்தியடைந்து மெடதும்பர பிரதேச செயலகத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவள் பயிற்சியின் போது மிகவும் கஷ்டப்பட்டு படித்தாள் என்றும் தெரிவித்துள்ளார்.