பேச்சு குறைபாடுள்ள தாயார் : கிணற்றில் 4 வயது சிறுமியின் சடலம் மீட்பு : நடந்தது என்ன?

518

ருவன்வெல்ல, கிரிபோருவ பிரதேசத்தில் உள்ள கிணற்றில் இருந்து 4 வயது சிறுமியின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (17) காலை இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில் தெவ்மி அமயா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கிணற்றுக்கு அருகில் பேச்சு குறைபாடுள்ள அவரது தாயார் மயங்கி கிடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.