நடிகை அனுஷ்கா படப்பிடிப்பில் புகுந்த மர்ம திருடன் : பரபரப்புத் தகவல்!!

473

Anuska

ஐதராபாத்தில் நடிகை அனுஷ்கா நடித்துவரும் படப்பிடிப்பு தளத்தில் 1.5 கிலோ தங்க நகைகள் திருடு போயுள்ளது. ஐதராபாத்தில் ராமாநாயுடு ஸ்டூடியோவில் அனுஷ்கா நடித்துவரும் ராணி ருத்ரம்மா என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் படப்பிடிப்பிற்காக சென்னையில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் இருந்து ஒன்றரை கிலோ எடையுள்ள தங்க நகைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

அந்த நகைகளை கடையின் ஊழியர் ரவி சுப்பிரமணியம் என்பவர் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு, காரில் ஓட்டுனரின் இருக்கைக்கு பின் வைத்து எடுத்துவந்துள்ளார்.

பின்னர் பிற்பகலில் படபிடிப்பு இடைவேளையின் போது தயாரிப்பாளரிடம் நகையை கொடுப்பதற்காக ரவி காருக்கு சென்றபோது அங்கே நகைப்பெட்டியை காணவில்லை.

இதையடுத்து, பட தயாரிப்பாளர் ராம்கோபால் சைபராபாத் காஜிபவுலி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.