இந்திய அணியை வீழ்த்தி ஒன்பதாவது ஆசிய மகளீர் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணி!!

386

ஒன்பதாவது ஆசிய மகளீர் கிண்ண தொடரில் இலங்கை அணி 08 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றியிலக்கை கடந்த இலங்கை அணி ஒன்பதாவது ஆசிய மகளீர் கிண்ணத்தை தன்வசப்படுத்தியுள்ளது. இலங்கை அணி ஆசியக் கிண்ணத்தை முதல் முறையாக வென்றுள்ளது.

ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Smriti Mandhana அதிகபட்சமாக 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Kavisha Dilhari 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Harshitha Samarawickrama ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 69 ஓட்டங்களை பெற்றதுடன், அணித்தலைவர் Chamari Athapaththu 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.