ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த இளைஞன் பரிதாபமாக பலி!!

392

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய உள்ளூராட்சி சபை வேட்பாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நவகத்தகம உள்ளூராட்சி சபைக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்ட கொங்கடவலயைச் சேர்ந்த 36 வயதுடைய டபிள்யூ.டி.எம்.ஜகத் குமார வன்னிநாயக்க என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வீட்டில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள தனது நண்பருக்கு சொந்தமான காணியில் வெற்றிலை பயிரிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தோட்டத்திற்கு நீர் பெறுவதற்காக அதனை அடுத்துள்ள விவசாய கிணற்றுக்கு சென்ற போது அருகில் மின்சாரம் தாக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.