கனேடிய பெண்ணொருவரை 30 ஆண்டுகளுக்கு முன் வெறுங்கையுடனும், இரண்டு பிள்ளைகளுடனும் கைவிட்டுச் சென்றார் அவருடைய கணவர்.
ஆனால், அந்தப் பெண் இன்று ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக வாழ்ந்துவருகிறார்.
பொதுவாக செல்வந்தர்கள் கலைப்பொருட்களை வாங்கி தங்கள் வீடுகளை அழகுபடுத்துவார்கள். ஆனால், கனேடிய பெண்ணொருவர், வீடுகளையே கலைப்பொருட்கள்போல் வாங்கிக் குவித்துள்ளார்.
தற்போது இங்கிலாந்திலுள்ள கென்டில் மாளிகை ஒன்றில் பிளாஸ்டிக் சர்ஜனான தன் இரண்டாவது கணவரான Stephen என்பவருடன் வாழ்ந்துவரும் அவரது பெயர், Dr Ann Kaplan Mulholland.
அவரிடம் தற்போது 11 வீடுகள் உள்ளன. இங்கிலாந்திலுள்ள கென்டில் 139 ஏக்கர் பரப்பில் ஒரு மாளிகை, ஹவாயில் மூன்று வீடுகள், கனடாவில் ஐந்து வீடுகள், லாஸ் வேகஸில் 17,000 சதுர அடியில் ஒரு வீடு, அதன் விலை 18 மில்லியன் டொலர்கள்.
இன்று தலையில் வைர கிரீடமும், கையில் 23 காரட் நிச்சயதார்த்த மோதிரமும், டிசைனர் உடையும், 4,000 பவுண்டுகள் மதிப்புடைய ஷூக்களுமாக இளவரசி போல வலம் வருகிறார் ஆன்.
அவரது முதல் கணவர், கனடாவின் ரொரன்றோவில் இரண்டு குழந்தைகளுடன் ஆனை கைவிட்டுவிட்டு காணாமல் போனார்.
முறையே 21 மற்றும் 9 மாதங்களே வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் தனித்துவிடப்பட்ட ஆன், தனியாளாக மருத்துவ கடன் வழங்கும் பிசினஸ் ஒன்றைத் தொடங்கினார்.
கடுமையாக உழைத்து முன்னேறிய ஆனுடைய சொத்து மதிப்பு, இன்று 500 மில்லியன் பவுண்டுகள், இலங்கை மதிப்பில் 1,51,65,30,50,000 ரூபாய்