விதிமுறை மீறல் வழக்கில் நடிகர் வையாபுரி நீதிமன்றத்தில் ஆஜர்!!

738

Vaiyapuri

நடிகர் வையாபுரி தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்துள்ளார்.

இந்நிலையில் சிதம்பரநகரில் பிரசாரம் செய்ய அவர் பொலிசாரிடம் அனுமதி பெறாததால், தேர்தல் விதிமுறையை மீறியதாக நடிகர் வையாபுரி மற்றும் அதிமுக செயலாளர் ஏசாதுரை, கவுன்சிலர்கள் தனராஜ், ஜெயக்குமார் ஆகியோர் மீது தென்பாகம் பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, தூத்துக்குடி துணை நீதிமன்றத்தில், நடந்த வழக்கு விசாரணையில் நடிகர் வையாபுரி ஆஜராகியுள்ளார், மேலும் அவருடன் அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் வந்துள்ளனர்.