
ஆந்திரா மாநிலத்தில் பார்வை குறைபாடு கொண்ட சிறுவர்களை பள்ளி ஆசிரியர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் பள்ளி ஒன்றில் கண் பார்வை குறைப்பாடு கொண்ட மூன்று சிறுவர்களை அப்பள்ளியின் ஆசிரியர் கே.வி.ராவ் மற்றும் அவரது உதவியாளர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
பிரம்படியை தாங்க மூடியாமல் அந்த சிறுவர்கள் எங்களை விட்டுவிடுங்கள் என கதறி அழுதுள்ளனர்.எனினும் இவர்களது தாக்குதல் ஓய்ந்த பாடில்லை.மேலும் இச்சம்பவம் கைபேசியில் காணொளியாய் எடுக்கப்பட்டு இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து பள்ளிக்கு சென்ற பொலிசார் ஆசிரியர் கே.வி.ராவ் மற்றும் அவனது உதவியாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு அனைத்து தொண்டு நிறுவனங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.





