தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை!!

205

தனியார் துறை ஊழியர்களுக்கான ஊதியத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


குறைந்தபட்ச மாதாந்த ஊதியத்தை 17,500 ரூபாவாகவும் குறைந்தபட்ச நாளாந்த ஊதியத்தை 700 ரூபாவாகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச மாதாந்த ஊதியம் 12,500 ரூபாவாகவும் குறைந்தபட்ச நாளாந்த ஊதியம் 500 ரூபாவாகவும் உள்ளது.


இது தொடர்பான சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேசிய குறைந்தபட்ச ஊதிய அதிகரிப்பு திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.