மனைவியிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய நபருக்கு நேர்ந்த விபரீதம்!!

325

கம்பளை – அம்புலுவாவ மலைக்கு தவறான பாதையில் ஏறிச்சென்ற நபரொருவர் கல் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெஹியோவிட்டவிலிருந்து கம்பளைக்கு வந்த நான்கு பேர் கொண்ட குழுவினரில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெஹியோவிட்ட, முருத்தெட்டுவ பிரதேசத்தினை சேர்ந்த தமிந்த சமரதுங்க என்ற 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மனைவியிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளமை தெரியவந்துள்ளது.  சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.