வவுனியா மாவட்ட சகல பள்ளிவாசல் நிர்வாகிகளுக்குமான விசேட செயலமர்வு!!

590

இஸ்லாமிய கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள வக்ஃபு சபை உறுப்பினர்களினால் நேற்று முன்தினம் வவுனியா மாவட்டத்திலுள்ள சகல பள்ளி நிர்வாகிகளுக்குமான செயலமர்வு ஒன்று வவுனியா நகர பள்ளிவாசலில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹனைஸ் பாரூக் தலைமையில் இடம்பெற்ற செயலமர்வில் பின்வரும் விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இஸ்லாமிய கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள வக்ஃபு சபையில் பள்ளிவாசல்களை பதிவு செய்வது தொடர்பாகவும், இஸ்லாமிய அடிப்படையில் நிர்வாகிகளின் தன்மைகள் தொடர்பாகவும், வக்ஃபு சபையின் சட்டதிட்டங்கள் தொடர்பாகவும், கறாம் (இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட) புகைபிடித்தல் மது அருந்துதல் போன்ற தீய பழக்கத்தை விடுதல் சம்மந்தமாகவும், சகல பள்ளி நிர்வாகிகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

குறித்த செயலமர்வில் வளவாளராக ஜம்மியத்துல் உலாமா மாவட்ட சபை தலைவர் NP ஜூனைட் அவர்களும் எம் ஜே எம் றிஸ்வான் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

1 2 3 4 5