16 நிமிடங்களில் 369 ஆசனங்கள் செய்து அசத்திய 7 வயது சிறுமி!!

545

கோவில்பட்டியைச் சேர்ந்த 7 வயது சிறுமி, 16 நிமிடங்களில் 369 ஆசனங்களைச் செய்து காட்டி அசத்தியுள்ளார்.

கோவில்பட்டியை சேர்ந்த பாலமுருகன் – கிருஷ்ணவேணி என்ற தம்பதியினரின் 2வது மகள் சக்திபிரபா(7) தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறு வயதிலிருந்தே யோகா கற்றுக்கொண்டு வரும் இந்த சிறுமியின் சாதனை எஸ்.டி.ஆர்.மேல்நிலைப்பள்ளியில் , சுவாமி விவேகானந்தா யோகா- ஸ்கேட்டிங் கழகம் சார்பில் இன்று அரங்கேறியுள்ளது.

சூரிய நமஸ்கார ஆசனத்துடன் தனது சாதனை முயற்சியை தொடங்கிய இந்த சிறுமி, மகாமுத்திரா, பத்ராசனம், நடராஜ் ஆசனம், ஆஞ்சநேயா ஆசனம் என 369 ஆசனங்களை 16 நிமிடங்களிலேயே நிறைவு செய்துள்ளார்.

இதுகுறித்து சக்திபிரபா கூறியதாவது, யோகா பயிற்சியாளரான சுரேஷ்குமார் மாஸ்டரிடம் தொடர்ந்து இரண்டு வருடங்களாக பயிற்சி பெற்றேன் என்றும் அதனால் இப்போது கூட குறைந்தது 450 ஆசனங்களை தொடர்ந்து என்னால் செய்யமுடியும் எனவும் தெரிவித்துள்ளார். இவருக்கு பாபாசாய் ராஜாராம், சிவதமிழவன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டியுள்ளனர்.

C1 C2 C3