அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியொன்றில் இருந்து 10 வருடங்களின் பின்னர் மீட்கப்பட்ட சடலம்!!

136

அமெரிக்காவில் 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பல்பொருள் அங்காடியில் குளிர்சாதனப் பெட்டிக்கு பின்னால் சிக்கியிருந்த இளைஞர் ஒருவரின் உடல் 10 வருடங்களின் பின்னர் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயோவாவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்று சுமார் 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டில் பல்பொருள் அங்காடியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

இதன்போது, அங்கிருந்த குளிர்சாதனப் பேட்டி ஒன்றை அவர்கள் அகற்ற முயன்றபோது, அதன் பின்னால் அழுகிய நிலையில் உடல் ஒன்று இருந்துள்ளது.

உடனே பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மனித உடலைக் கைப்பற்றி DNA பரிசோதனைக்கு அனுப்பியதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், 2009ஆம் ஆண்டில் காணாமல்போன Larry ely murillo-moncada என்பவரின் உடல் தான் அது என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் குளிர்சாதனப்பெட்டிக்கு பின்னால் சிக்கியதன் விளைவாகவே உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் யூகித்துள்ளனர்.

எனினும், உயிரிழந்த இளைஞன் சிக்கியது விபத்தாக இருந்தாலும் அவர் உதவிக்கு அழைத்திருக்கக்கூடும். அது எப்படி கடைக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்தவர்களுக்கு தெரியாமல் போனது? அவரின் குரல் யாருக்கும் கேட்கவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இவ்வாறு எழுந்த கேள்விக்கு விளக்கம் அளித்த பொலிஸார், உயிரிழந்த இளைஞன் 12 அடி உயரம் கொண்ட அந்த பாரிய குளிர்சாதனப்பெட்டியில் இருந்து வந்த சத்தத்தால், அதற்கு பின்னால் இருந்து அவர் எழுப்பிய குரல் கேட்காமல் போயிருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அந்த இளைஞனுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை புரிய வைக்க கிராஃபிக்ஸ் காணொளி ஒன்றை தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர்.